ஏ.அப்துல்லாஹ்: எகிப்து
இஹ்வான்கள் மீது சிஸி நிர்வாகம் கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டுவரும்
நிலையில் நேற்று மற்றுமொரு ‘சட்ட க்குமுறை’ மேற்கொள்ளப்பட்டுள்ளது .
எகிப்து இஹ்வான்கள் அமைப்பின் உறுப்பினர்கள் , ஆதரவளர்கள் 183 பேருக்கு
எகிப்து நீதிமன்றம் ஒன்று நேற்று கூடாக மரணதண்டனை விதித்து
தீர்ப்பளித்துள்ளது .
கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி
மூலம் ஜனாதிபதி முஹம்மது முஷி பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட
கலவரத்தில் கர்தசா நகரில் 16 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட
சம்பவத்திலேயே 183 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த
தாக்குதல்கள் சிஸியினால் அரங்கேற்றப்பட்ட நாடகம் என தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய மரணத்தீர்ப்பு எகிப்தின்
பக்கசார்பான குற்றவியல் நீதித்துறைக்கு மற்றுமொரு உதாரணம் என சர்வதேச
அமஸ்டி நிறுவத்தின் மத்திய கிழக்கு துணைப் பணிப்பாளர் Hassiba Hadj Sahraoui குறிப்பிட்டுள்ளனர் ,
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில்
வழங்கப்பட்ட இந்த மரண தண்டனை தீர்ப்பு மீண்டும் சில மாற்றங்களுடன் நேற்று
02 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எகிப்தில் ஒரே நேரத்தில் பாரிய
எண்ணிக்கையிலானோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது சம்பவம் இது,
முன்னதாக 2014 ஏப்ரலில் சிஸி நிர்வாகம் 683 பேருக்கு ஒரே நேரத்தில் மரண
தண்டனை விதித்தது சர்வதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக