புதிய அரசாங்கத்தை செப்டம்பர் மாதம் அமைக்க வேண்டுமானால் அடுத்த மாதம்
10 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என தேர்தல்கள்
செயலகம் அறிவித்துள்ளது.அவ்வாறு கலைக்கப்பட்டால் ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் பாராளுமன்றத் தேர்தலை நடாத்த முடியும் எனவும் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படிப் போனாலும், தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினம், தேர்தல் நடாத்தும் தினம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டியது ஜனாதிபதியேயாவார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக