ஜெர்மனிய குழந்தைகள் நல மருத்துவர்
ஒருவர் தனது 102ஆவது வயதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.இன்கேபோர்க் சிலம்
ரோபோபார்ட் என்ற அந்த பெண்மணி 77 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் அப்போது
அதிகமிருந்த தொண்டையடைப்பான் நோய் குறித்து தனது ஆய்வுக் கட்டுரையை
சமர்பித்திருந்தார்.
ஆயினும் நாஜிக்களால் தனது இறுதித் தேர்வில் பங்கேற்பதிலிருந்து அவர் தடுக்கப்பட்டார்.
இவரது தாய் யூதர் என்பதால் அப்போதிருந்த சட்டங்களின்படி இவருக்கு வாய்வாழித் தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்தத் தவறை சரி செய்ய தற்போது ஹாம்பர்க் பல்கலைக்கழகம் முனைந்துள்ளது.
கடந்த வாரம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறையைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் பெர்லினில் உள்ள இன்கேபேர்க்கின் வீட்டுக்குச் சென்று அவருடைய ஆய்வுக் கட்டுரை குறித்து சில கேள்விகளைக் கேட்டனர்.
அவருடைய பதில்களால் திருப்தியடைந்த அவர்கள், இன்கேபோர்க் அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் பரிந்துரைத்தனர். அதன்பேரில் இன்று நடக்கும் சிறப்பு நிகழ்வில் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது.
தான் எழுதிய ஆய்வுக் கட்டுரை குறித்து 102 வயதில் பதிலளிப்பது கடினமாக இருந்தாலும், நாஜிக்களின் ஆட்சியால் பாதிக்கப்பட்டோரின் நினைவாக தான் இதைச் செய்ததாக இன்கேபோர்க் தெரிவித்துள்ளார்.
ஒரு அநீதியைச் சரிசெய்ய பல்கலைக்கழகம் விரும்பியது, அதற்காக அவர்கள் மிகவும் பொருமையுடன் என்னிடம் நடந்துகொண்டனர். அதற்காக தான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளதாக அந்த அம்மையார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக