திங்கள், 15 ஜூன், 2015

2020 ஆம் ஆண்டு ஏற்றுமதி இலக்கு 20 பில்லியன் அமெரிக்க டொலர்! -அமைச்சர் ரிஷாட் பதியுதீன்


2020ம் ஆணடு நோக்கிய ஏற்றுமதி இலக்கு சுமார் இருபது பில்லியன் அமெரிக்க டொலராக இருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் தெரிவிக்கின்றார்.

அதேவேளை இலங்கை தராதர அங்கீகார சபை உடலியல் விஞ்ஞான புதிய சோதனைகளுக்கான சான்றிதழினை இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார்.

தேசிய உடல் உறுப்புக்கள் சார்ந்த கட்டுப்பாட்டு பிரிவு (யேவழையெட ழுசபயniஉ ஊழவெசழட ருnவை), ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கீழ் சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கின்றது.
இது உடலியல் விஞ்ஞான புதிய சோதனைகளுக்கான கண்காணிப்பு பணிகளில் செயல்பட ஆரம்பித்திருக்கின்றது.
ஆசிய-பசிபிக் தராதர ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு மற்றும் பசிபிக் தராதர அங்கீகார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் வருடாந்த ஒன்றுகூடல் நேற்றைய தினம் கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்றிருக்கின்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
இதில் அமைச்சர் றிஷாட் பதியூதீன் தொடர்ந்து உரையாற்றுகையில்...
பிராந்திய தராதர அங்கீகார மாநாடு கொழும்பில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பல்வேறு தராதர அங்கீகாரம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சோந்த 160 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக் கொழும்பு மாநாட்டில் கலந்;துக்கொண்டு மருத்துவம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டவர்கள் மத்தியில் நாடுகளுக்கிடையில் பொருட்களையும், சேவைகளையும் கொண்டு செல்வதற்கும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்கும் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்கும் தராதர அங்கீகாரம் அவசியமாகும்.
இலங்கையின் தராதர அங்கீகாரம் மீதான அடுத்த நடவடிக்கையினை எமது அமைச்சினூடாக நாம் ஊக்குவிக்கவுள்ளோம். இது வாழ்க்கைத் தரங்களை சீர்மைப்பதடன் நமது ஏற்றுமதியினையும் அதிகரிக்க வழிவகுக்கும்.
இதுவரையில் 16 தேசிய மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, மேலும் 10; ஆய்வுகூடங்கள் பரிசீலனைக்கான அங்கீகாரத்திற்கு காத்திருக்கின்றன,
அளவீடு மற்றும் சான்றிதழ்களுக்கான பரஸ்பர அங்கீகார ஏற்பாடுகளின் சோதனைக்காக பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கையின் தராதர அங்கீகார சபை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
இலங்கை சார்க் அமைப்பின் உறுப்புரிமை பெற்றிருக்கின்றது அதனால் பரஸ்பர அங்கீகார திட்டங்களின் கீழ் பரிமாறிக்கொள்வதற்கு நாம் பொதுவான தயாரிப்புகளுக்கு ஒத்திருக்கும் தரத்தை அடையாளப்படுத்தியுள்ளோம்.
இலங்கை தராதர அங்கீகார சபை, மருத்துவ ஆய்வுகூடங்களுக்கு வழங்கி வருகின்ற தராதர அங்கீகாரமானது, மருத்துவ பரிசோதனைகளின் நம்பகத் தன்மையை உறுதிசெய்வதுடன், மருத்துவ தொழிற்துறை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நம்பகமான சோதனை சேவையொன்றைத் தெரிவு செய்வதற்கு வழிகோலும் வகையில் திறன்மிக்க கட்டுக்கோப்பு ஒன்றுக்கும் உத்தரவாதம் அளிக்கின்றது.
தராதர அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள ஆய்வு கூடமொன்று அங்கு மேற்கொள்ளப்படுகின்ற சோதனையின் பெறுபேறுகள் நம்பகமானவை என்ற உத்தரவாதத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.
2012 ஆம் ஆண்டில், இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 145 புதிய, ஐளுழு சான்றிதழ்கள் மற்றும் 14 சர்வதேச தரத்திற்கு இணையான சான்றிதழ்களும் வெளியிடப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் இலங்கை தராதர அங்கீகார சபையினால் 83 நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் அங்கீகரிக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பொருளாதார நோக்குக்கு அமைய நாம் 2020 ஆம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஏற்றுமதி இலக்கை நோக்கி செல்கின்றோம்.
போட்டிமிக்க உலக சந்தைகளில், இலங்கை தராதர அங்கீகார சபையின் அங்கீகார சான்றிதழ் மூலம் உயர் தர பொருட்கள் வழங்கி சர்வதேச சந்தை வெற்றி இலக்குகைளை தொடர்ந்து ஈட்ட முடியும் எனவும் இதன்போது அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.
இவ் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ். மியன்வெல மற்றும் மேலதிக செயலாளர்கள், இலங்கை தராதர அங்கீகார சபைதலைவர் நாமல் ராஜபக்ஷ ஆசிய பசிபிக் தராதர ஆய்வக அங்கீகார ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி. கோய்ஷி நாரா, பசிபிக் தராதர அங்கீகார ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைவர் பிறிட் ஆப்ரகாம் மற்றும் உள்ளூர்- வெளியூர் தராதர அங்கீகார சபையின் அனைத்து பிற அதிகாரிகளும் அங்கத்தவர்களும் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக