வெள்ளி, 5 ஜூன், 2015

பாராளுமன்றம் 9ம் அல்லது 10ம் திகதிகளில் கலைக்கப்படலாம்?

பிரதமருக்கு எதிராக பயனற்ற வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளமையால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில நாட்களில் பாராளுமன்றத்தை கலைப்பார் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கிய தேசியக் கட்சியினால் புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டது.
எனினும் நடைமுறை பாராளுமன்றத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் சபாநாயகரும் பாராளுமன்ற கலைப்புக்கு பரிந்துரைத்திருப்பதால் பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு எதிரான யோசனைக்காக 112 பேரின் கையொப்பங்களே திரட்டப்பட்டுள்ளன. எனினும் அரசாங்கமே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதா? இல்லையா? என்று தீர்மானிக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதமர் காரியாலய தரப்புக்களின் தகவல்படி எதிர்வரும் 9ம் அல்லது 10ம் திகதிகளில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக