திங்கள், 1 ஜூன், 2015

இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனை


 
இலங்கையில் போதைப்பொருள் குளிசைகள் மற்றும் போதைப்பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்வோருக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது சிறந்ததாகும் என்று தான் யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை முன்வைப்பதாகவும் அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை செவிமடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக