முசலி பட்டதாரிகள் ஒன்றியம்
அன்பின் முசலி வாழ் பெருமக்களே, சகோதர சகோதரிகளே!
தற்போது இலங்கையின் முக்கிய பேசுபொருளாகவும், முஸ்லிம் சமூகத்தின் எரிந்து கொண்டிருக்கின்ற பிரச்சினையாகவும் முசலிப் பிரதேசத்தின் மீள்குடியேற்றம் மற்றும் வில்பத்து விவகாரம் முக்கியமாகிறது.
இப்பிரச்சினைக்கு பல்வேறு கோணங்கள் இருக்கின்றன. இவைகள் குறித்து எம்பிரதேசத்து உறவுகள் மிகவும் நிதானமாகவும், அவதானமாகவும் நடக்க வேண்டியது இன்றைய காலத்தின் முக்கிய கடமையாகும்.

இன்றைய
காலத்தில் நாம் நிதானமாகவும் அவதானமாகவும் நடக்காதபோது எம் பிரதேசத்தின்
மீள்குடியேற்றம், கல்வி, விவசாயம் மற்றும் ஏனைய அபிவிருத்திகள் என்பன பகல்
கனவாகிவிடுமோ என்ற அச்சம் எம்மை வாட்டுகிறது.
எமது தாய் பூமியின் சொந்தங்கள் தினமும் வாழ்வுக்காக கண்ணீர் வடிப்பதும் அதனை கொழும்பிலும் ஏனைய பிரதேசங்களிலும் உள்ளவர்கள் தங்களது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக எமது கண்ணீரை அவர்களின் ஆனந்தக் கண்ணீராக மாற்றுகிறார்கள் என்பதை நாளுக்கு நாள் உணரக் கூடியதாக இருக்கின்றது.
எம் உறவுகளே! எமது சொந்தங்களே! சகோதர சகோதரிகளே!
எமது தாய் பூமியைக் காப்பாற்றுவோம், எமது சொந்தங்களை வாழ வைப்போம். எனவே, உங்கள் அனைவரிடமும் மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் மிகவும் நிதானமாகவும் அவதானமாகவும் நோக்குங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பான்.
ஒரு உடம்பின் காலில் முள் குத்தினால் அந்த உடம்பின் கண் கலங்குவதுபோல் அந்த உடம்பின் ஒன்றாக உங்களிடம் கேட்கிறேன். அது அடுத்த உடம்பல்ல.
எமது தேசத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகள் எரிந்து கொண்டிருக்கின்றன. இவைகளுக்குப் பின்னால் உள்ள பிரச்சினை என்ன? ஏன் இந்தப் பிரச்சினைகள்? இப்பிரச்சினை எப்போது எப்படி தீர்க்கப்படும்? போன்றவைகளை எப்படி எம் உறவினர்களிடம் தெளிவுபடுத்துதல் என்பது குறித்து தவிக்கிறோம்.
தயவு செய்து கேட்கிறோம் - எமது பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைவோம். ஒருமித்து ஒன்றாக குரல் கொடுப்போம்.
நாம் தற்போது துண்டாடப்பட்டுள்ளோம். எமது தாயகத்துக்காக ஒன்றுபடுவோம். நிச்சயமாக அல்லாஹ் அருள் புரிவான்.
எமது தேசத்தையும் எம்மவர்களையும் நினைத்து கண்ணீர் வடித்தவனாக உங்களிடம் கேட்கிறேன். வாருங்கள் ஒன்றிணைவோம். எம் தேசத்தைப் பாதுகாப்போம்.
(ஒற்றுமையின் பலத்தைப் பாருங்கள்- ஒன்றுபடுவோம் எம் தேசத்தைப் பாதுகாக்க)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக