- TPT -
உலக புகையிலை
எதிர்ப்பு தினம்’ முன்னிட்டு பேரணி, கையேடு விநியோகம், சுவரொட்டி ஆகியன 2015.06.07-ம்
திகதி புத்தளம் நகரில் நடைபெற்றது. புத்தளம் பிரதேச செயலகம், வொடெப்ட் நிறுவனம் இணைந்து
இவ் எதிர்ப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இப் பேரணியில்
புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், வொடெப்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் டி.எல்.எம். மகீன், நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ.எம். ரிபாஸ் (நளீமி) உட்பட
ஊழியர்களும் சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி அதிகாரிகளும் வொடெப்ட் நிறுவனத்தின்
கிராம செயற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் அதன் சிறுவர் கழக அங்கத்தவர்கள்
(சிறுவர்கள்) கலந்துகொண்டனர்.
‘சிகரட் விற்பவன்
ஊரை விற்று காசு தேடும் சுயநலவாதி’, ‘சிகரட் விற்பவன் ஒரு சமூகத் துரோகி’, ‘கொலைசெய்தவனுக்கு
மரண தண்டனை – சிகரட் விற்பவனுக்கு என்ன தண்டனை’ போன்ற சுலோகங்கள் காட்டப்பட்டது.
இலங்கையில்
மட்டும் ஒரு நாளைக்கு புகையிலை உற்பத்திகளினால் 60 பேர் மரணிக்கின்றனர் என்றும்
இம் மரணங்களுக்கு சிகரட் விற்பனை செய்பவரும் பொறுப்பாளியாகும் காரணத்தினால் இக்
குற்ற உணர்வில் இருந்து சிகரட் விற்பனை செய்வோர் மீள முடியுமா? என்ற கேள்வியும்
முன்வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக