செவ்வாய், 2 ஜூன், 2015

வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் நிதி ஒதுக்கீடு

- முஹம்மது முஹ்சி -

வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் (ஸ்ரீ.ல.மு.கா) புத்தளம் நகரில் சில சமய,கல்வி மற்றும் பொது பணிகளுக்கு தனது இவ்வருட (2015)மாகாண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்திருந்தார்.
1. கடையாக்குளம் மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிக்கு பாத்திரங்கள்.
2. மணல்குன்று மன்பவுஸ் சாலிஹாத் பெண்கள் ஹிப்லு மற்றும் அல்குர்ஆன் அரபுக் கல்லூரிக்கு கணனி
3. இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் சிங்கள தஹ்வா பிரிவுக்கு புத்தகங்கள், பிரிண்டர்.
4. பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி உள்ளக பாதை அபிவிருத்தி.
5. தில்லையடி முஸ்லிம் வித்தியாலயத்துக்கு தளபாடங்கள்.
6. கடையாக்குளம் பொதுசன காரியாலய நிர்மாணப் பணிக்கு கட்டிடப் பொருட்கள்.

சென்ற வருடம்(2014)
சாஹிரா தேசிய பாடசாலைக்கு பிளாஸ்டிக் கதிரைகள்,
சைனப் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பார்வையாளர் அரங்குப் பூர்த்தி செய்தல்,
நூர் பள்ளி வாசலுக்கு சீமெந்துப் பக்கட்டுக்கள்,
பாக்கியாத்துஸ் சாலிஹாத் பெண்கள் மத்ரசாவின் நிர்மாணப் பணிக்கு கட்டிடப் பொருட்கள் முதலானவற்றையும் பெற்றுக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக