திங்கள், 15 ஜூன், 2015

கலாநிதி முர்ஸிக்கு இணையத்தளம் மூலமாக ஆதரவு திரட்டப்படுகிறது


கலாநிதி முர்ஸிக்கு இணையத்தளம் மூலமாக ஆதரவு திரட்டப்படுகிறதுஎகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட, அண்மையில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்ட்ட ஜனாதிபதி முர்ஸிக்குஆதரவாக இஸ்தான்பூலை தலைமையமாகக் கொண்ட "Freemorsi.org" இணையத்தளத்தின் மூலமாக 2,500 ஆர்வலர்கள் ஆதரவு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளனர். 


இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கபட்டு, அரசியல் இலாபநோக்கில் மரண தண்டனை விதிக்கப்ட்டுள்ள முர்ஸி உட்பட 105 சக பிரதிவாதிகளை காப்பாற்றும் நோக்கிலேயே இத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இது மாத்திரமன்றி, இவ்விணையத்தளத்தினூடாக கையெழுத்து வேட்டைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக