வியாழன், 4 ஜூன், 2015

மன்னார் - புத்தளம் வீதி தொடர்பான வழக்கில் முசலி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழக்கு தாக்கல்

அன்பான முசலி மக்களே!
மன்னார் - புத்தளம் வீதி தொடர்பான வழக்கில் முசலி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழக்கு தாக்கல் செய்த காலம் முதல் அதற்காக போராடி வருகிறார்கள். விஷேடமாக சட்டத்தரணி பி.எம்.எம் அஸ்லம் (நளீமி) Peer Mohamed Mohamed Aslam இவ்வழக்கில் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து செயற்பட்டு வருகிறார்.
இதன் படி புத்தளம் - மன்னார் வீதி வழக்கு 28.05.2015 வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது முசலி மக்கள் சார்பாக தானாக முன்வந்து முக்கிய சட்டத்தரணிகள் சிலருடன் எமது மக்கள் சார்பாக சட்டத்தரணி பி.எம்.எம். அஸ்லம் Peer Mohamed Mohamed Aslam போராடி வருகிறார். இவ்வழக்கு தற்போதைய மீள்குடியேற்றத்துடனும் சம்பந்துப்பட்டுள்ளது. என்பதை எமது மக்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறோம்.

இவ்வழக்கு எதிர்வரும் ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முசலி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவராக முசலி மக்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பி.எம். முஜீபுர் ரஹ்மானும் Mujeeb Ur Rahman (பத்திரையாளர்) பங்கு பற்றி இருந்தார்.
இவ்வழக்கில் வெற்றி பெற பிரார்த்திக்குமாறு எம் உறவுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
1. இவ்வழக்கிற்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவழிக்கப்பட்டுள்ளன. (இது குறித்து எதுவும் கூறவில்லை - எவ்வளவு செலவழித்தாவது இவ்வழக்கை வெற்றி கொண்டால் போதும் என்பதே எமது நோக்கம் - பல வருடங்களாக அடுத்தவர்கள் யாரையும் அழைக்காமல் சுயமாக முன்வந்து இக்குழு போராடிக் கொண்டிருக்கிறது. இது யாருக்காக?)
2. இவ்வழக்கின் உண்மைத் தன்மை, இவ்வழக்கு ஏன் தாக்கல் செய்யப்பட்டன.
3. இதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன?
4. இதனால் நாம் எவ்வாறான விளைவுகளை சந்திக்கப் போகிறோம்.
5. இப்பாதையை திறப்பது குறித்து ஏற்கனவே எத்தனையோ கையொப்பங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக நாம் அறிகிறோம். அவை வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நாம் அறிகிறோம். உறவுகளே... ! இப்பாதை குறித்து யாராவது உங்களிடம் கையொப்பம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள். உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் யாராலும் எதனையும் செய்ய முடியாது.
6. இப்பாதையைத் திறந்து தருகிறோம். அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என யாராவது சொன்னால் அதனை நம்பாதீர்கள். இவ்வாறு உண்மையைத் தேடி அறியாமல் ஏமாந்தது போதாதா? ஏனெனில் அது உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொறுத்தது.`

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக