திங்கள், 15 ஜூன், 2015

இலங்கை பிரதிநிதிகளுடன் நல்லிணக்கம் குறித்து பேச ஆவலாக உள்ளோம்!


இலங்கையின் புதிய அரசு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

அது சரியாக செயற்படுத்தப்பட்டால் இலங்கையின் ஜனநாயகத்தின் மீதும் சட்டங்கள் மீது நம்பிக்கை ஏற்படும் என ஐநா சபை மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் zeid raad al hussein தெரிவித்துள்ளார்.

(15.06.2015) ஐ.நா. சபையில் நடைபெற்ற 29th Regular Session of Human Rights Council 1வது அமர்வில் உரையாற்றுகையிலேயே ஆணையர் Zeid தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்
செப்டம்பர் மாதம் நடைபெறும் அமர்வில் தாக்கல் செய்யவுள்ள இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமரசம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து அந்நாட்டின் பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக உள்ளோம்
மேலும் இலங்கை அரசாங்கம் தங்கள் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சமூக அமைப்புகள், பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பணிகளுக்கான முழு ஆதரவு மற்றும் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக