திங்கள், 15 ஜூன், 2015

அரசியல் கட்சிகளின் நோக்கங்களை விட மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம் பொது மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டுமென - ஜனாதிபதி

கட்சியின் நோக்கங்களை விட மக்களின் நலன் முக்கியமானதுஅரசியல் கட்சிகளின் நோக்கங்களை விட மக்கள் பிரதிநிதிகளின் நோக்கம் பொது மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று முற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மற்றும் மாகாண மட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பிலான மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண மட்டத்தில் நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, 28 வருடங்களாக நடைமுறையிலுள்ள மாகாண சபை முறைமையின் பயன்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டியுள்ளது. சிறந்த செயற்பாடுகள் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் மாகாண சபைகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மாகாண சபைகள் எப்போதுமே தம்மிடமுள்ள அதிகாரங்கள் பற்றியே கவனத்திற் கொள்கின்றன. எனினும், தம் வசமுள்ள அதிகாரங்களை முறையாகப் பயன்படுத்தி சாத்தியமாகவும் பயனுள்ளதாகவும் மக்கள் சேவையை பெற்றுக் கொடுக்க அர்ப்பணிக்க வேண்டும். அத்துடன் மாகாண சபையோ அல்லது பாராளுமன்றமோ மக்களின் நிதியை செலவு செய்யும் சகல சந்தர்ப்பங்களிலும் வீண் விரயம் மற்றும் ஊழல்கள் இடம்பெறு வதைத் தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக