எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட
முடியாதுபோனால், நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கு முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
இந்த தகவலை மஹிந்த ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமாக செயற்படுபவரும்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.எஸ்வர் ஐ.பி.சி தமிழ்
செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலின்போது தெரிவித்தார்.
பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்சவை போட்டியிட வைப்பதற்கான சகல முயற்சிகளும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இடமளிக்காமல் இடறலாக உள்ளார் என அவர் கூறினார்.
இருப்பினும் பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காவிடின் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகிலும் போட்டியிடுவதற்கு மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக முன்னாள் எம்.பி அஸ்வர் குறிப்பிட்டார்.
எது எப்படியோ, அடுத்துவரும் பொதுத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் நுழைவதே மஹிந்த ராஜபக்சவின் பிரதான நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக