அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் மெகி நூடில்ஸ் நிறுவனத்தின் துணைத்
தலைவர் பந்துல எகொடகேவும் சீனா விஜயம் செய்துள்ளமை சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.மெகி நூடில்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் பந்துல எகொடகே, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீனுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாக ஒரு முக்கிய இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நூடில்ஸ் தடை செய்யப்படக் கூடாது என்பதற்காக இவ்வாறு முயற்சிக்கப்படுகின்றது எனவும் குறிப்பிடப்படுகிறது.
எகொடகே இறக்குமதி சபையின் தலைவராகவும் கடமையாற்றி வருகின்றவர்.
தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சருடன் எகொடகேவும் பயணம் செய்துள்ளார். இந்தியாவின் சில பகுதிகளில் மெகி நூடில்ஸ் வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் நுகர்வோர் அதிகாரசபையின் ஆணையாளர் ரூமி மர்சூக் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
நூடீல்ஸ் வகை குறித்து விசாரணை நடத்தியதனால் ஏற்பட்ட அழுத்தமே பதவி வலகக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அமைச்சருடன் எகொடகேவும் சீனா விஜயம் செய்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக