ஞாயிறு, 21 ஜூன், 2015

திஹாரியின் கல்வி துறை எங்கே செல்கிறது


அஸ்கர் தஸ்லிம்.         திஹாரியின் கல்வி முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் தோல்வியிலே முடிந்து போயுள்ளன. இந்த நிறுவனங்களின் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய்கையில் மூன்று பிரதான விடயங்களை அவதானிக்கலாம்..



முதலாவது, திஹாரியின் கல்வி முன்னேற்றத்துக்குத் தடையான உண்மைக் காரணிகளை கள ஆய்வுகள் மூலம் கண்டறியாமல், கல்வி அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சித்தமை.
இரண்டாவது, முறையான திட்டமிடலின்றி அவசர அவசரமாக அவை ஆரம்பிக்கப்பட்டமை.
மூன்றாவது, நிறுவனத்தின் அங்கத்தவர்களுக்கு இடையிலும், அங்கத்தவர்களுக்கும் பயனாளர்களுக்கும் இடையிலும் போதிய ஒருங்கிணைப்பு காணப்படாமை.
இந்த நிறுவனங்களையும் திட்டங்களையும் ஆரம்பித்தவர்கள் தூய எண்ணத்துடனேயே இவற்றை ஆரம்பித்தனர் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஆனாலும், இவற்றை செவ்வனே முன் கொண்டு செல்வதற்கான திறன் கொண்டவர்கள் இன்னும் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.
இனியும் குறுகிய கால Project களை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை விட்டு விட்டு, திஹாரியன் கல்வி வளர்ச்சிக்குத் தடையாக உள்ள உண்மையான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றை நீக்கி, கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டிய காலம் வந்துவிட்டது.
வெறுமனே, “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்ற பாணியல் அல்லாது, முறையான கள ஆய்வுகள் மேற்கொண்டதன் பின்னரே, திஹாரியின் கல்வி முன்னேற்றத்துக்கான வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக