திங்கள், 15 ஜூன், 2015

தீர்ப்பை ரத்துச்செய்து மீள்விசாரணையை நடத்துமாறு சட்டமா அதிபர் மனுத்தாக்கல்!


இரத்தினபுரி, காவத்தை, கொட்டகதென்ன இரண்டு பெண்கள் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச்செய்து விசாரணையை மீள நடத்துமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

2012ம் ஆண்டில், இடம்பெற்ற இந்த கொலை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஆதாரங்கள் இன்றி கடந்த மாதம் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆட்சேபித்து காவத்தையில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தநிலையில், குறித்த விடுதலை தீர்ப்பை ரத்துச்செய்து விசாரணைகளை மீள நடத்தவேண்டும் என்று சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக