எந்தவித எதிர்ப்புக்கள் வந்தாலும் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த
மக்களுடன் சேர்ந்து தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப்
போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.நாட்டுக்குத் தேவையான பொருளாதார, அரசியல், சமூக மாற்றங்களை முன்னெடுக்க உள்ள தடைகளை உடைத்தெறிவேன். நான் எனது ஆட்சிக்காலத்தில் மக்கள் வழங்கிய ஆணையை இதற்காக சரியாக பயன்படுத்துவேன்.
எனது பதவிக்காலம் முடிந்தவுடன் கொழும்பில் தங்குவதற்கு மாளிகைகளை எதிர்பார்க்க மாட்டேன். எனது பெட்டியை எடுத்துக் கொண்டு பொலன்னறுவைக்கு சென்றுவிடுவேன் எனவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக