திங்கள், 15 ஜூன், 2015

களத்துக்கு வருகிறது ‘முஸ்லிம் பேஃஸ்’


றமழானின் ஆரம்பத்துடன் சமூக வலைப்பின்னல் தளங்களின் வரிசையில் ‘முஸ்லிம் பேஃஸ்’ உம் இணைந்து கொள்கிறது.

இஸ்லாமிய பெறுமானங்களுடன் இயைந்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இச்சமூக வலைப்பின்னல் தளம் பாலியல், தற்கொலை மற்றும் வன்முறையைத் தூண்டக் கூடிய அம்சங்கள் அற்றதாக அமைக்கப்பட்டிருப்பதாக அதன் வடிவமைப்பாளர்களான ஷஅப் பிதாயி மற்றும் றூஹுல் அமீன் ஷுஅய்ப் தெரிவித்துள்ளனர்.

இச் சமூக வலைப்பின்னல் தளமானது ஆங்கிலம், அறபு உட்பட பத்து மொழிகளை உள்ளடக்கியிருப்பதாகவும், பல்வேறு நாடுகளிலும் இதன் காரியாலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.muslimface.com/
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக