மஹிந்த ராஜபக்ஷ தனது நெருங்கிய ஆதரவாளர்களுக்கும், உறவினர்களுக்கும் தூதுவர் பதவி உட்பட பல்வேறு பதவிகளையும் வழங்கினார்.
அந்தப் பதவிகளை வகிக்க அவர்களுக்கு தகுதி தராதரம் இருக்கவில்லை. அவரைச் சுற்றி திருட்டுக்களில் ஈடுபட்ட கள்வர் கூட்டமே உள்ளது.
அந்தத் திருடர்களைப் பிடித்து விசாரணை
நடத்தும் போது பழிவாங்குகிறோம் என அழுது புலம்புவதாகவும் ஜே. வி. பியின்
செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்களின் வரிப்பணங்களை களவாடிய
பெரும் அரசியல் திருடர்களுக்கு தண்டனை வழங்க அரசு விரைவாக செயற்படாமை
கவலைக்குரியது.
மக்களுக்கு உண்மையான பரிசுத்தமான அரசியல்
பின்புலமே தேவையாகி உள்ளதாகவும் கண்டி தபால் கேட்போர் கூடத்தில் நடந்த
விசேட செயலமர்வில் வைத்து தெரிவித்த அவர், ஒரு குழுவினருக்கு மஹிந்தவை
பிரதமராக்கி பசில் ராஜபக்சவை பாதுகாப்பதே முக்கியமாகும். நாட்டுப்
பிரச்சினைகளைப் பேச அவர்கள் தயாரில்லை. முழு மக்கள் தொகுதிக்கும் மாற்றம்
தேவை அதற்கு மாற்று வழி ஜே. வி. பியாகும் எனவும் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக