திங்கள், 15 ஜூன், 2015

நிதி மோஷடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது - மேஜர் அஜித் பிரசன்ன


New Picture (2)நிதி மோஷடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு சட்ட விரோதமானது. இவர்களில் யாராவது வீடுகளுக்கு வந்து கைது செய்யவோ, விசாரணைக்கு அழைத்துச் செல்லவோ முற்பட்டால், அவர்களை வீட்டின் கதவுக்குப் போடும் தடியினால் அடித்து விரட்டுங்கள் என முன்னாள் தென் மாகாண சபையின் அமைச்சர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.


கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற தென் மாகாண சபையின் அமைச்சர் டீ.வீ. உபுலின் வழக்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.
இப்பொலிஸ் பிரிவு புலிப் பயங்கரவாதிகளுக்கு இருந்தது போன்ற சட்டவிரோதமான ஒன்றாகும். இது பிரதமர் ரணிலினால் அரசியல் பழிவாங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்று.  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதிலிருந்து நடைபெற்று வரும் சட்ட விரோத நடவடிக்கைகளில் இதுவும் இப்பிரிவும் ஒன்றாகும். இவர்களை கல்லெறிந்து கொலை செய்யுமாறு நான் கூறவில்லை. ஆனால், தடியெடுத்து அடித்து விரட்டுங்கள் எனக் கூறுகின்றேன். இதனைக் கூற நான் அஞ்சமாட்டேன்.
பிரதமர் ரணிலின் நியமனம் சட்டவிரோதமானது. இவரினால் அமைக்கப்பட்ட பொலிஸ் பிரிவும் சட்டவிரோதமானது. இந்த நாட்டில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதாக இருந்தால், பிரதமருக்கு எதிராக அல்ல அதனைக் கொண்டு வரவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக எனவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக