எகிப்து வரலாற்றிலேயே முதன் முறையாக ஜனநயாக தேர்தல் ஒன்றின் மூலம் 2012
ஜூன் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மூர்ஸி 2013 ஜூலை 3
ஆம் இராணுவச் சதிபுரட்சி மூலம் ஜெனரல் அப்துல் பாத்தாஹ் ஸி ஸி யினால் பதவி
கவிழ்க்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த மாதம் 17 ஆம் திகதி கலாநிதி மூர்ஸி உற்பட சுமார் 100 சகோதரத்துவ அமைப்பின் பிரபலங்களுக்கு எகிப்தின் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்து தீர்பளித்திருந்தாலும், எகிப்தின் பிரதான முப்தியின் பரிந்துரைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதான முப்தியின் பரிந்துரை பெறப்பட்ட பின்னர் மரண தண்டனையை இன்று அதே
நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், அந்த தீர்ப்பிற்கு
எதிராக மேல் முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தலைமை முப்தி உட்பட நீதிபதிகள் ஸி ஸி யின் செல்வாக்கினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்த தலைமை முப்தி உட்பட நீதிபதிகள் ஸி ஸி யின் செல்வாக்கினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக