
கொழும்பு பொரலையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது கடந்த 30 ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது இன்று 1 ஆம் திகதி பகல் 11 மணிவரையில் எவரும் பொலிசாரினால் கைது செய்யப்படாத நிலையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தி மஸ்ஜித்தின் முன்பாக இன்று பிற்பகல் 12:30 மணியளவில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய சமாதான முன்னணியின் ஏற்பாட்டில்
இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபுர்
ரஹ்மான், கொழும்பு தெற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் டயஸ் உடன்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய
நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக