ஞாயிறு, 7 ஜூன், 2015

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஷீயாக்களின் ஊடுருவல் அதிகரிப்பு

அம்பாறை மாவடட ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான விசேட செயலமர்வு நேற்று சாய்நதமருதில் நடைபெற்ற போது தலைமை வகித்து உரையாற்றிய அஷ்ஷெய்க்.எஸ்.எச். ஆதம்பாவா அவர்கள்;
http://thesam.lk/wp-content/uploads/2015/06/unnamed.jpg“எமது நாட்டில் தற்போது ஷீயா கொள்கை மிகவும் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. எமது பிரதேசங்களிலும் இது வேகமாக பரவி வருகின்றது. இதற்கான முயற்சிகள் பல்வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எந்தளவுக்கு என்று சொன்னால் புலமைப்பரிசில் என்ற போர்வையில் எமது பிள்ளைகளின் உள்ளங்களில் ஷீயாக்களின் நச்சுக் கருத்துகள் விதைக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து எமது சமூகம் விளிப்பூட்டப்பட வேண்டும்.
நாம் சஹாபாக்களை சரிசமனாக மதிக்கின்றோம், கண்ணியப்படுத்துகின்றோம். நேசிக்கின்றோம். குறிப்பாக கலீபாக்கள் அபூபக்கர், உமர், உஸ்மான், அலி (ரலி) போன்றோரில் எவரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுவதில்லை. அவர்களது மனைவிமாரையும் மதிக்கின்றோம். ஆனால் ஷீயாக் கொள்கையானது இந்த சஹாபாக்களை மிகவும் மோசமாக விமர்சிக்கின்றது. இந்த நச்சுக் கருத்துகள் எமது மக்கள் மத்தியில் பரப்பபடுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.
பள்ளிவாசல் பொறுப்புதாரிகளும் உலமாக்களும் மார்க்கத்தின் பாதுகாவலர்கள். நாங்கள் இவ்விடயங்களில் மிகக் கவனமாக இருந்து சமூகத்தை வழிநடாத்த கடமைப்பட்டிருக்கின்றோம். ஷீயா விடயத்தில் இரு தரப்பினரும் இணைந்து எமது சமூகத்தில் அவர்களின் ஊடுருவலை முற்றாக இல்லாதொழிக்க பாடுபட வேண்டும்.
அதேவேளை ரமழான் வந்து விட்டால் தலைப்பிறையில் தொடங்கி பெருநாள் வரை அனைத்து விடயங்களிலும் பிரச்சினைகள் எழுகின்ற சமூகமாக நாம் மாறியிருக்கின்றோம் அமைதியையும் சமாதானத்தையும் வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுகின்ற நாங்கள் வீண் சர்ச்சைகளுக்குள் சிக்கித் தவிக்கின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக