தேசிய மட்டத்தில் நடணப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற மாணவிகளை அமைச்சர் றிஷாட் பதியூதீன் கௌரவித்திருக்கின்றார்.
பாடசாலைகளுக்கு இடையேயான தேசிய மட்ட நடண போட்டி அண்மையில் இடம்பெற்றிருந்தது.குறித்த போட்டியில் மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரிய மடு மகாவித்தியாலயம் இரண்;டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
நடண போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட மாணவிகளை கைத்தொhழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியூதீன் சான்றிதழ் வழங்கி கௌரவித்திருக்கின்றார்.
இந்நிகழ்வின் போது வடமாகாண சபை உறுப்பினர் றிவ்ஹான் பதியூதீன், மடு வலயக்கல்விப்பணிப்பாளர் குரூஸ் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக