தற்போது காணப்படும் நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு தீர்வாக
உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான மக்கள்
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோர இந்த பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக