நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை
துரிதப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட
தீர்மானித்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம்
தெரவித்துள்ளனர். அனுராதபுர சிறைச்சாலைக்கு சனிக்கிழமை (20) காலை சென்ற
பிரதி அமைச்சர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை
சந்தித்து அவர்களது தேவைகளை கேட்டறிந்து
கொண்டார். அதன் போது தாம் நீண்ட காலமாக
தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சிலர் 20 வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலருக்கு இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் சாட்சியங்கள் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் கைதிகள் பிரதி அமைச்சரிடம் முறையிட்டனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவோம் என கூறினார்கள், ஆனால் இதுவரை அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரியவில்லை எனவும் தமது விடுதலையை துரிதப்படுத்துமாறும் அவர்கள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். எமது விடுதலை தாமதப்படுத்தப்பட்டால், விடுதலையை துரிதப்படுத்தக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அனைவரது கவனத்துக்கு கொண்டு வருவதாக இதன்போது அமைச்சர் உறுதி மொழியளித்தா அமைச்சின் ஊடகபிரவு தெரிவிகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக