சனி, 19 மார்ச், 2016

தவக்குல் கர்மானும் சமூகத்தின் பெண்களின் உருவாக்கமும்!!

குழந்தையைக் கட்டியெழுப்புவதில் அதனது ஆரம்ப சமூகமயமாதலுக்குறிய நிறுவனம்(Primary  Socialization), குடும்பமாகும். ஒரு குடும்பத்தில் முக்கிய அங்கத்தவர் தாய்; பின்னர் தந்தை மற்றும் பிற. பாடசாலையானது ஒரு குழந்தையின் கற்றல் மற்றும் ஆளுமையை
விரிவுபடுத்தும் மிக முக்கியமான இடமாகும். இதுவே ஒரு குழந்தையின் இரண்டாம் சமூகமயமாதலுக்குறிய நிறுவனமாகும்(Secondary Socialization Institution) மேலும்,பாடசாலையில் இருந்து ஒரு குழந்தை உறிஞ்சிக் கொள்ளும் சுய உருவாக்கமானது, தனது குழந்தைக்கு ஒரு குடும்பத்தால் கொடுக்க முடியாத நிறுவனமயப்படுத்தபட்ட தனிப்பட்ட,மாறுபட்ட பல பரிமாணங்களைக் கொண்டதொரு வேலைத் திட்டமாகும். எனவேதான்,சமூகங்கள், மற்றும் தேசங்கள் பாடசாலையென்றதொரு பிரத்தியேகமான நிறுவனத்தை அமைக்கின்றன. அவை ஒவ்வொரு குழந்தையினதும் பூரண உள்ளடக்கத்தை(Absolute Potentiality)முழு அளவில் (Utmost Level) வெளிக்கொணர்வதற்காக மிக நுணுக்கமான (Precious) அமைப்புகளை நிறுவி,தொடர்ச்சியான ஆய்வுகளுக்குமாக தமது வரவு செலவு திட்டத்தில் ( பெருந்தொகையான ?! ) பணத்தை ஒதுக்கி கல்வித்திட்டம் மற்றும் அதனடியான கல்வியை முன்னெடுக்கின்றன. இவற்றிற்கப்பாலானவை, குழந்தையின் சமூகமயமாதலுக்குறிய மற்றைய நிறுவனங்களாகும். ஆக, ஒரு இலட்சிய (Ideal) ஆணையோ பெண்ணையோ கட்டியெழுப்புதல் என்பது இச்சமூக நிறுவனங்களும் அவற்றின் இலட்சியங்களும் அவற்றினையொத்த கல்வித்திட்டமும்; முறைமைகளும்  மற்றும் பழக்கவழக்கங்களும் பிறவும் என்பவற்றிற்கேற்பவே அமைகின்றது. ஒரு பெண்ணைப் பொருத்தவரையில் தாய்மை மற்றும் தாயாக இருப்பது என்பது ஒரு முக்கியமான வகிபாகமாகும்.அதே போன்று ஒரு ஆணோ அல்லது பெண்ணோ வாழ்வில் பல பாகங்களை (Roles)வகித்தாக வேண்டும். குழும்பத்தில் ஆணொருவர் மகன்;கணவன்;தந்தை ; சகோதரன் என பிறவும். பெண்ணானவர், மகள் ;மனைவி;தாய்;சகோதரி என பிறவும். மேலும் சமூகத்தில் ( 3rd and Beyond) ஆண்களைப் போன்று பெண்களின் அவர்களுக்கேயுறிய பங்களிப்புகளும் பாகங்கங்களை வழங்குகின்றன. ஆக, குடும்பம் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்புதல்;நாட்டை கட்டியெழுப்புதல் ஆகியவற்றில் ஆணோ பெண்ணோ பல பாகங்களை ஆற்றியாக வேண்டும். அவர்கள் வகிக்கும் பாகங்களும் அவற்றின் முரண்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் (Roles&Roles Conflict) என்பவற்றை முகாமைப்படுத்தி வளம் மிக்க; நலம் மிக்க மற்றும் பலம் மிக்க ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அதற்குத் தகுதியான ஆண்களையும் பெண்களையும் உருவாக்குவதே கல்வி நிறுவனங்களின் நோக்கும் பணியாகும்.

தவக்குல் கர்மா அவர்களின் சமூகமயமாதலுக்குரிய நிறுவனங்களும்  அவரது சமூகத்தில் நிலவிய சூழலும் அவரின் உள்ளடக்கத்தையும் ஆளுமையை (Potentiality&Personality) வெளிக்கொணர்ந்துள்ளன!  அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் போது தனித்துவ சமூக ஆளுமைகள் வெளிப்படும். இது நியதியாகும்.முழு சமூகத்தின் எழுச்சியென்பது வேறுபட்ட பரிணாமங்களையுடையன. விடயம் என்னவெனில், எத்தகைய ஆண்களை ; பெண்களை நாம் உருவாக்கப்போகிறோம்? எதனை நோக்கி உருவாக்கப் போகிறோம்?அவற்றிற்கான வரைவுகளை சமூகம் கொண்டுள்ளதா? அவ்வாறெனின் அவை எதனடியாகப் பெறப்பட்டுள்ளன? இம் மகா பாய்ச்சலுக்குறிய(Strategic Flow) மூலோபாயம் என்ன? அதனை சிறப்பாக முகாமைப்படுத்தி முன்னெப்பதற்கான தலைமத்துவம் உள்ளதா?அது நம்பகமானதா? (Stability and flow management) மறுபுறத்தில்  நமது பிள்ளைகளை அவர்களின் உள்ளடக்கத்தினை  வேறு பிரித்தறிய எத்தகைய அளவுகோல்களை நமது பாடசாலைகள்  கொண்டுள்ளன?அவர்களின் தனித்திறமைகளையும்  அறிவு மட்டத்தையும் வெளிக்கொணர்வதற்கு எத்தகைய வகுப்பறைகள் அமைக்கப்பெற்றுள்ளன? ஒரு தேசத்தின் வீழ்சிக்குறிய மிக முக்கியமானதும் அடிப்படையானதுமான குழந்தையின் உள்ளக ஆற்றல்களை மற்றும் ஆளுமையை ஒடுக்குவதில்(Dehumanization) செல்வாக்கு செலுத்துகின்றதொரு நிலைமைகளை சமூகம் அடையாளம் கண்டுள்ளதா? போன்ற இன்னோரன்ன மிக உயிர்மையான கேள்விகளுக்கு விடை காணலாகும்!!  உலக அரங்கில் முன்மாதிரியான செல்வாக்குச் செலுத்த விரும்பும் சமூகங்களாக நாடுகளாக மிளிர வேண்டும் எனில்..!!
நன்றிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக