செவ்வாய், 15 மார்ச், 2016

பாலர்­ ­பாடசாலைகளுக்கு­ ­பொறியாலாளர்­ அப்துர்­ ­ரஹ்மான்­ ­விஜயம்

காத்தான்குடி­ ­பிரதேசத்தில்­ ­இயங்கும்­ ­சில­ ­பாலர்­ பாடசாலைகளுக்கான­ ­விஜயம்­ ­ஒன்றினை­ நல்லாட்சிக்கான­ ­தேசிய­ ­முன்னணி­ (NFGG)­யின்­ தவிசாளர்­ ­பொறியியலாளர்­ ­அப்துர்­ ­ரஹ்மான்­ நேற்று­  (14.03.2016) ­மேற்கொண்டிருந்தார்­.­ (படங்கள் இணைப்பு)


அந்த­ ­வகையில்­ ­றிஸ்வி­ ­நகர்­ ­பகுதியில்­ இயங்கும்­ ­அல்இக்பால்­ ­பாலர்­ ­பாடசாலை­, காத்தான்குடி­ 5­ம்­ ­குறிச்சியில்­ ­இயங்கும்­ ஜாமியுழ்ழாபிரீன்­ ­பாலர்­ ­பாடசாலை­ ­மற்றும்­ அப்றார்­ ­பகுதியில்­ ­இயங்கும்­ ­அப்ரார்­ ­பாலர்­ பாடசாலை­ ­ஆகியவற்றுக்கே­ ­அவர்­ ­இந்த­ விஜயத்தினை­ ­மேற்­ ­கொண்டிருந்தார்­.­
இந்த­ ­விஜயத்தின்­ ­போது­, ­இப்பாலர்­ பாடசாலைகள்­ ­எதிர்­ ­கொண்டுள்ள­ ­பிரச்சினைகள்­, குறைபாடுகள்­ ­மற்றும்­ ­தேவைகள்­ ­குறித்து­ பாடசாலை­ ­ஆசிரியைகளுடனும்­, ­அதன்­ நிர்வாகத்தினருடனும்­ ­அவர்­ ­விரிவாகக்­ கலந்துரையாடினார்­.­தமது­ ­பாடசாலைகளின்­ உடனடித்­ ­தேவைகளாக­ ­சீருடைகள்­, ­கற்றல்­ உபகரணங்கள்­, ­மற்றும்­ ­தளபாடங்கள்­ ­போன்ற­ விடயங்கள்­ ­கோரிக்கைகளாக­ ­முன்வைக்கப்பட்டன­.­

அவற்றுக்கான­ ­சில­ ­உடனடித்­ ­தீர்வுகளை­ ­தமது­ சொந்த­ ­நிதியிலிருந்து­ ­உடனடியாக­ பெற்றுத்தருவதாக­ ­வாக்குறுதியளித்த­ ­அவர்­, ­பாலர்­ பாடசாலைகளின்­ ­நலன்களை­ ­மேம்படுத்துவதற்கான­ தொடர்ச்சியான­ ­வேலைத்திட்டங்களை­ NFGG முன்னெடுக்கவுள்ளதாகவும்­ ­உறுதியளித்தார்­.­

இந்த­ ­விஜயத்தின்­ ­போது­ NFGG­யின்­ ­காத்தான்குடி­ பிராந்திய­ ­சபையின்­ ­பிரதிநிதிகளான­ ASM ­ஹில்மி­, PMM  ­நவாஸ்­ ­மற்றும்­ KMA ­காதர்­ ­ஆகியோரும்­ கலந்து­ ­கொண்டிருந்தனர்­.­




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக