வியாழன், 28 ஏப்ரல், 2016

நூல் அறிமுகம்.

இன்று(2016.04.28) உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் நளீமி அவர்கள் "#அன்றாட_வாழ்வியல் பிரச்சினைகளுக்கான பத்வாக்கள்" என்ற ஒரு மொழிபெயர்ப்புத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். இலங்கை முஸ்லிம்களுக்கு தேவையான சில பத்வாக்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. அவையாவன :


1. நபி(ஸல்) பிறந்த தினத்தை கொண்டாடல்
2. மஹ்ரமின்றி பெண் பிரயாணம் செய்தல்
3. உயிரோடிருக்கும் பிள்ளையை வெளிக்கொணர இறந்த தாயின் வயிற்றை கிழித்தல்.
4. ஊழியர் சேமலாப நிதி பெறல்.
5. ஹராமான செயற்பாடுகள், தீமைகள் கலந்து காணப்படும் பதவிகளை ஏற்றல்.
6. ஸகாத் நிதியும் கல்வி வேலைத்திட்டமும்.

இஸ்லாமிய வரலாற்றில் சட்ட அறிஞர்கள் பல பத்வா நூற்களை இயற்றியுள்ளனர். சிறியதும் பெரியதுமாக உள்ள அவை மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே விஷேட பண்பாகும்.

அந்த அடிப்படையில் இமாம் இப்னு தைமிய்யாவின் மஜ்மூஉ பதாவா மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. இது 35 பாகங்களைக் கொண்டது.
நவீன காலப்பிரிவில் இமாம் ரஷீட் ரிழா,இமாம் ஷல்தூத்,அபூ ஸஹ்ரா,கலாநிதி ஷெய்க் முஸ்தபா அஹ்மத் ஸர்கா,ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி போன்ற பலரின் பத்வா நூற்களும் வெளிவந்துள்ளன.

இங்கு உஸ்தாத் மன்சூர் அவர்கள் திரட்டியுள்ள பத்வாக்கள் உலகின் தலைசிறந்த அறிஞர்களுடையனவாகும்.
அவர்கள் :

1. ஷெய்க் அப்துர் ரஹ்மான் ஸஃதி.
சஊதி அரேபியாவை சேர்ந்த சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த ஸலபி சிந்தனைப் போக்கைக் கொண்ட சட்ட அறிஞராவார்.

2. ஷெய்க் கலாநிதி அலி முஹ்யித்தீன் கர்ரா தாகி.
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர். கட்டார் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்ட பீடத்தின் தலைவர். பல சட்ட புத்தகங்களின் ஆசிரியர்.

3. ஷெய்க் கலாநிதி அஹ்மத் அல் ரைஸூனி.
மிகப் பெரும் சட்ட அறிஞர். மகாஸித் அஷ் ஷரீஆ (சட்ட உயர் இலக்குகள்) என்ற துறையில் நிபுணர்.

இந்த அறிஞர்களின் நூற்களிலும்,அவர்களின் இணையதலங்களிலும் இருந்து இந்த பத்வாக்கள் திறட்டப் பட்டுள்ளன.

For more details 0772262640

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக