செவ்வாய், 3 மே, 2016

அறபு இலக்கிய நயம் தொடர்பாக


ஜெஸார் ஜௌபர்

க.பொ.த சாதாரண தரத்தில் 6 கட்டாயப் பாடங்களோடு மூன்று தெரிவுப்பாடங்களுக்கு மாணவர்கள் தோற்ற வேண்டும்.

அதில் இலக்கிய நயம் சார்ந்த கூடையி்ல் அறபு இலக்கிய நயம் ஒரு பாடமாக நீண்டகாலமாக  மாணவர்களால் தெரிவு செய்யப்படுகிறது.


இப்பாடம் பல்வேறு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டாலும் கற்பித்தலுக்குத் தேவையான வழிகாட்டிகளோ, ஏனைய கற்றல் உபகரணங்களோ காணப்படாமையை பல்வேறு ஆசிரியர்கள் சுட்டிக் காட்டினர்.

2015 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தததோடு இணைந்ததாக அறபு இலக்கிய நயத்துக்கான புதிய ஒழுங்கு படுத்த்பபட்ட பாடத்திட்டமும் அதற்கான ஆசிரியர் வழிகாட்டிகளையும் தயாரித்துள்ளோம்.

பாடத்திட்டம் ஆசிரியர் வழிகாட்டிகள் தொடர்பான தௌிவுபடுத்தும் கருத்தரங்குகளையும் மாகாண அடிப்படையில் ஒழுங்கு செய்துவருகிறோம்.

இவ்வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை புதிய பாடத்திட்டத்தைத் தழுவியே நடைபெறும்.

அதற்கான மாதிரி பரீட்சை வினாத்தாள்கள் இம்மாத இறதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளமுடியும்.

அல்குர்ஆன், அல்ஹதீஸ் உட்பட அறபு இலக்கியம்- அறிமுகம் கவிதை. சிறுகதை, உரைநடை, பழமொழி, துஆக்கள் மற்றும் அறபுத் தமிழ் இலக்கியம் முதலான சிறப்பான பகுதிகளை உள்ளக்கி அவற்றை நயத்தல் தொடர்பான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தரம் 10,11 ஆகியவற்றுக்கு தயாரிக்கப்பட்ட ஆசிரியர் (அச்சிடப்படாத) வழிகாட்டிகளை  நாம் பல பிரதேசங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளோம்.

பெற்றுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் 07777751737 என்ற இலக்கத்திற்கு தமது பெயர், பாடசாலை, மின்னஞ்சல் முகவரி என்பவற்றை எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக