வியாழன், 29 நவம்பர், 2018

வேதம் இறங்கிய நாட்களில் முஸ்லிம் பெண்


கலாநிதி இஸாம் அல்-பஷீர் அவர்கள் எழுதிய அல்-மர்ஆ அல்-முஸ்லிமா பீஃ அஸ்ரித் தன்ஸீல் என்ற நூலினை ‘வேதம் இறங்கிய நாட்களில் முஸ்லிம் பெண்’ என்ற தலைப்பில் பகுதி பகுதியாக மொழிபெயர்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிடலாம் எனக் கருதி ஆரம்பித்திருக்கிறேன்.

சர்வதேசத்திலும் உள்நாட்டிலும் முஸ்லிம் பெண்கள் குறித்து பெரும் வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் பெண்களை அடக்கி வைத்திருப்பதாக மேற்கத்திய சிந்தனை பாதிப்புள்ளோர் குற்றம் சுமத்துகின்றனர். மறுபுறம் உள்வீட்டுக்குள் பெண்களை அவர்களுக்குரிய அந்தஸ்த்தில் பார்க்காத ஒரு சமூகம் இருந்து வருகிறது. இவற்றுக்கு மத்தியில் பெண் பற்றிய சமனிலையானதும் சரியானதுமான பார்வையை இந்நூல் தருகிறது.

சூடானில் கற்றுக்கொண்டிருந்த நாட்களில் கலாநிதி இஸாம் பஷீரின் அலுவலுகத்திற்கு போகும் பழக்கம் இருந்தது. அப்போது அன்பளிப்பாக கிடைத்த பல நூல்களில் ஒன்றுதான் இந்நூலும். அவருடைய அலுவலகத்தில் பணியாற்றிய சகோதரர் ஸம்ரூத் நானா இந்நூல்களைக் கிடைக்கச் செய்தார்.  அவருக்கு என்னுடைய நன்றிகள்.

பேராசிரியர் இஸாம் அல்-பஷீர்

பேராசிரியர் இஷாமுத்தீன் அஹ்மத் அல்-பஷீர் உலகறிந்த அறிஞர். இஸ்லாமிய அழைப்பாளர். சூடானைப் பிறந்தகமாகக் கொண்ட கலாநிதி இஷாம் பஷீர் தனது இளமாணிக் கற்கையை சவூதி அரேபியாவின் இமாம் முஹம்மத் இப்னு சுஊத் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பூர்த்தி செய்தார். அதேபல்கலைக்கத்தின் உஸ{லுத்தீன் பீடத்தில் தனது முதுமாணிக் கற்கையை நிறைவு செய்த அவர் சூடானின் உம்திர்மான் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் துறையில் கலாநிதிக் கற்கையை நிறைவு செய்தார்.
சர்வதேத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள கலாநிதி அவர்கள் பல சர்வதேச மாநாடுகளில் பங்;குபற்றியுள்ளதுடன் பல்வேறு ஆய்வுகளை முன்வைத்துள்ளார். பொறுப்புவாய்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் அவருக்கிருக்கிறது.

நடுநிலை சிந்தனைக்கான சர்வதேச நிலையத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும், சூடானின் முன்னாள் அவ்காப் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். பிரான்ஸின் இஸ்லாமியக் கற்கைகளுக்கான ஐரோப்பிய கல்லூரியின் பொறுப்பாளராக 1989 -1992 வரை பணியாற்றினார். மக்காவில் அமைந்துள்ள றாபிததுல் ஆலமில் இஸ்லாமியின் இஸ்லாமிய பிக்ஹ் மன்றம், பத்வாவுக்கும் ஆய்வுகளுக்குமான ஐரோப்பிய சபை, சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியம் போன்ற நிறுவனங்களில் உறுப்பினராக உள்ளார். சூடானின் இஸ்லாமிய பிக்ஹ் மன்றத்தின் தலைவராகவும், மறுமலர்ச்சிக்கும் நாகரீக தொடர்பாடலுக்கான அரங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கடமை புரிகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக