வெள்ளி, 30 நவம்பர், 2018

ஆட்சியும் அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்

- அஷ் ஷேஹ் இனாமுல்லாஹ் மஸீஹுதீன் -
 அதிகாரமும் புகழும் மாட்சிமையும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு உரியன, அவன் தான் நாடியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான், தான் நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்து எடுப்பான், என்று நாங்கள் விசுவாசம கொள்கிறோம்.

"(நபியே! பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதி! நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய்; மேலும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய்; இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய்; நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றன). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்". (ஸுரத் ஆல இம்ரான் 3:26)
                                           
அவன் நாடியவர்களை மேன்மைப் படுத்துவான், நாடியவர்களை சிறுமைப் படுத்துவான், இரண்டையும் அதிகாரத்தைக் கொடுத்தும் செய்வான், பறித்தும் செய்வான். ஆட்சியும் அதிகாரமும் இருக்கின்ற நிலையிலும் சிலர் சிறுமைப் படுத்தப் படுவர், அவை சோதனைக்காக தரப்படுபவை.

பிரவுனுக்கும், ஹமானுக்கும், நும்ரூதுக்கும், அபூ ஜஹ்ல், உத்பா உமையாவிற்கும், உலகில் அழிவை அடக்குமுறைகளை முன்னின்று நடத்துகின்ற சர்வாதிகாரிகளுக்கும் ஆட்சியை அதிகாரத்தை வழங்கி சமூகங்களை சொதிப்பவனும் அவனே!

ஆட்சி அதிகாரம் மனித வர்க்கத்திற்கு வழங்கப்படுகின்ற மிகப் பெறும் சோதனையாகும், அல்-குரான் கூறும் நபிமார்களது வரலாறுகள், எமது உயிரிலும் மேலான தலைவர் முஹம்மத் (ஸல்) அவர்கது ஸீரா, அவர்களுக்குப் பின் வந்த குலபாஉ ராஷிதூன், உமையாக்கள், அப்பாசியர்கள் என தொடர்ந்து வந்த முஸ்லிம் உலக வரலாறு, உலக வரலாறு எல்லாமே மிகப் பெறும் சான்றுகளாகும்.

அண்மைகால முஸ்லிம் உலக வராலாறு உத்மானிய சாம்ராஜிய வீழ்ச்சி, அரபுலக மன்னர்களின் ஆட்சி எழுச்சி வீழ்ச்சி, யூதர்களின் எழுச்சி, இன்றைய அரபு வசந்தம், மத்தியகிழக்கில் ஏற்பட்டுவரும் ஆட்சி மாற்றங்கள், அழிவுகள் பேரழிவுகள் எல்லாமே ஆட்சி அதிகாரம் சார்ந்த சோதனைகள் தான்.

உலக அரசியலில் வல்லரசுகள், பிராந்திய வல்லரசுகள் அவற்றிற்கிடையிலான ஆதிக்கப் போட்டா போட்டிகள், அரசியல் இராஜ தந்திர பாதுகாப்பு நகர்வுகள், போர்கள், பனிப்போர்கள் எல்லாமே ஆட்சி அதிகாரம் சார் சோதனைகளின் வெளிப்பாடுகளே.

ஒரு உண்மை விசுவாசியைப் பொறுத்தவரை இந்தப் பிரபஞ்ச நியதியை மிகச் சரியாகப் புரிந்து கொள்வான், ஆளுபவனாகவும், ஆளப் படுபவனாகவும், அடக்குமுறைகள், அழிவுகளிற்கு ஆளாக்கப் படுகின்றவனாகவும் அவன் சோதிக்கப் படுவதனை உணர்ந்து வாழ்ந்து மரணித்து விடுவான்.

ஒரு விசுவாசி பெருமபன்மை முஸ்லிம் சமூகத்தில் வழலாம், சிறுபான்மை சமூகத்தில் வாழலாம், மேற்கில் வாழலாம், கிழக்கில் வாழலாம், முஸ்லிம் உலகில் வாழலாம், அரபுலகில் வாழலாம் அவன் வாழுகின்ற இடத்தில் தேசத்தில் அவனுக்கு ஒரு பணி கத்துக் கிடக்கிறது, அங்கு அவன் சோதிக்கப் படுகின்றான்.

அமைதி சமாதானம், உண்மை நீதி  நேர்மை சத்தியம் நிலைக்க குரல் கொடுப்பது, உழைப்பது பங்களிப்புச் செய்வது , இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால்  நல்லாட்சி கொள்கை கோட்பாடுகள் மேன்பட உழைப்பது, உரிமைகளுக்காக போராடுவது என தனியாகவும் கூட்டாகவும் தனது கடமைகளைச்  செய்வதில் இருந்தும் அவனுக்கு விரண்டு ஓடி விட  முடியாது.

இறுதிநாள் வரும் வரைக்கும், சத்தியம் அசத்தியத்திற்கு இடையிலான போராட்டம் நடைபெறுவதே இறைவன் வகுத்த உலக ஒழுங்கு, பிரபஞ்ச நியதி, நாளை ஆட்சி அதிகாரங்களோடு செல்வம் செல்வாக்குகளோடு தஜ்ஜால் புறப்பட்டு வரும் பொழுதும் விசுவாசிகளின் ஈமான் சோதிக்கப் படும், பட்டுக் கொண்டிருக்கும். 

இன்றைய சர்வதேச நெருக்கடிகளும் பிராந்திய தேசிய அரங்குகளில் ஏற்படுகின்ற நெருக்கடிகளும் ஒவ்வொரு விசுவாசியினதும் ஆன்மீக பலத்தை பவீனங்களை பரீட்சித்துப் பார்க்கின்ற மிகப் பெரும் சோதனைகளாகும்.

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல் பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.

(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.

(ஸுரத் அந்நூர்  24:55-57)

" மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையை ஏவுகிறீர்கள், தீமையை தடுக்கிறீர்கள், அல்லாஹ்வை நம்புகிறீர்கள். (அல் குர் ஆன் 3 : 110 )
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
"உங்களில் ஒருவர் ஒரு தீமையை கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்) இது இறைநம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்". ( அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) : முஸ்லீம்)

சந்தேகமில்லை, நாங்கள் தீமைகளை வெறுக்கின்றோம், சமூக அநீதிகளை வெறுக்கின்றோம், ஊழல் மோசடிகளை வெறுக்கின்றோம், அடக்குமுறைகளை வெறுக்கின்றோம், சர்வாதிகார கொடுங்கோலர்களை வெறுக்கின்றோம்...

ஆனால், எம்மால் கையால் தடுக்க முடிவதில்லை, நாவால் (கருத்தால் , எழுத்துக்களால், நிலைப்பாடுகளால்) தடுக்கமுடிவதில்லை...
ஆச்சரியம் என்னவென்றால் .. மேற்படி தீமைகளின் அநீதி அக்கிரமங்களின் உருட்டுப் புரட்டு திருட்டுக்களின், ஊழல் மோசடிகளின் காவலர்களின் செல்வம், செல்வாக்கு , அதிகாரம் என்பவற்றிற்கு முன்னால் சரணாகதி யடைந்து அண்டிப் பிழைப்பதும் ஆள் பிடித்து வால் பிடித்து அவர்களை உரமூட்டி வளரவைத்து வாழ வைப்பது தான்.

நாம் ஈமாமானின் எந்த அந்தஸ்த்தில் இருக்கிறோம்! நேர்மறையாக உயர பயணிக்கிறோமா~ ? அல்லது எதிர்மறையாக கீழ் நோக்கிப் பயணிக்கிறோமா?
ஒவ்வொருவரும் சுய விசாரணை செய்து கொள்வோம், ஈமானின் தராதரங்களை மதிப்பீடு செய்யும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சிக் கோள்வோம், அடுத்த கணம் அவனிடம் மீளழைக்கப்பட்டால் எமது நிலை குறித்தெண்ணி ஈமானைப் புதுப்பித்துக் கொள்வோம்.!

எமது சொந்த விருப்பு வெறுப்புக்கள் பந்த பாசங்கள், இலாப நஷ்டங்கள், பற்றுதல்கள் சகலவற்றிற்கும் அப்பால் மிகவும் சிந்தித்து நிதனாமாக ஆராவரங்களின்றி ஷூரா முறையில் தீர்வுகளை எடுத்து ஒரு உம்மத்தாக சமூகமாக வேறுபாடுகள் களைந்து விவேகமாக நடந்து கொள்ள எலாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக